மெக்சிக்கோவில் பயங்கர வன்முறை; விமான நிலையங்கள் சூறை. ஜாலிஸ்கோவின் டபல்பாவில் நடந்த சோதனையின் போது, மெக்சிகன் பாதுகாப்புப் படையினர் போதை பொருள் கடத்தல் தலைவர் நெமேசியோ ‘எல் மென்சோ’ ஒசேகுரா செர்வாண்டஸைக் கொன்றனர்.இந்த நடவடிக்கையில் காயமடைந்த அவர், மெக்சிகோ நகரத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் போது இறந்தார். அமெரிக்காவிற்கு ஃபெண்டானில் மற்றும் பிற போதைப்பொருட்களைக் கடத்துவதற்குப் பெயர் பெற்ற கார்டெல்லை குறிவைத்து நடத்திய துப்பாக்கிச் சண்டையில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.’எல் மென்சோ’ ஆதரவாளர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்; சாலைத் தடைகள், வாகனங்களை எரித்தல் மற்றும் விமான நிலையங்கள் சூறையாடப்பட்டன.
விமான நிறுவனங்கள் புவேர்ட்டோ வல்லார்டாவிற்கு விமானங்களை நிறுத்தியது. அமெரிக்க அதிகாரிகள் எல் மென்சோவின் மரணத்தை உறுதிப்படுத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை.