திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல்: ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்.
சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு அளித்துள்ளார்.
அப்போது, திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஊழல் தொடர்பான ஆதாரங்களை அளித்து, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஊழல் பட்டியல் குறித்து இபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறியது:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ. 64,000 கோடி
ஊரக வளர்ச்சித் துறையில் ரூ. 60,000 கோடி
சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் ரூ. 60,000 கோடி
எரிசக்தித் துறையில் ரூ. 55,000 கோடி
டாஸ்மாக் துறையில் ரூ. 50,000 கோடி
பத்திரப் பதிவுத் துறை ரூ.20,000 கோடி
நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 20,000 கோடி
நீர் ஆதாரத் துறையில் ரூ. 17,000 கோடி
சென்னை மாநகராட்சியில் ரூ. 10,000 கோடி
தொழில்துறையில் ரூ. 8,000 கோடி, பள்ளிக் கல்வித் துறையில் ரூ. 5,000 கோடி
மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ. 5,000 கோடி
வேளாண்மைத் துறையில் ரூ. 5,000 கோடி
சமூக நலன் துறையில் ரூ. 4,000 கோடி
உயர்க்கல்வித் துறையில் ரூ. 1,500 கோடி
இந்து சமய அறநிலையத் துறையில் ரூ. 1,000 கோடி
ஆதிதிராவிடர் நலத் துறையில் ரூ. 1,000 கோடி
சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறையில் ரூ. 750 கோடி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் ரூ. 500 கோடி
சிறைத் துறையில் ரூ. 250 கோடி
பால்வளத் துறையில் ரூ. 250 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்று இபிஎஸ் கூறினார்.