
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 9 தேதி முதல் 14 ம் தேதி வரை சென்னையில் இருந்து 10,245 சிறப்பு பேருந்துகளுடன் 22,792 பேருந்துகள் இயக்க திட்டம்.
சென்னையில் இருந்து மொத்தம் 11.35 லட்சம் பேர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று கணிப்பு.
அதேபோல், பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப 16 முதல் 19ம் தேதி வரை கூடுதலாக 6820 பேருந்துகளுடன் மொத்தம் 15,188 பேருந்துகள் இயக்க திட்டம்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இந்த பேருந்துகளை இயக்க திட்டம்-தமிழ்நாடு போக்குவரத்து துறை.