| பண்ருட்டியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 109-வது பிறந்த நாள் விழா |

| பண்ருட்டியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 109-வது பிறந்த நாள் விழா |

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில்  அ.இ.தி.மு நிறுவனர், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ஆர் 109-வது பிறந்த நாள் விழா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி நல்வாழ்த்துக்களுடன் பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள அதிமுக மகளிரணி துணைச் செயலாளர், பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர்செல்வம் இல்லத்திற்கு முன்பாக காலை 10.30 மணி அளவில் சென்னை புகழ் சசிகுமார் இன்னிசை குழுவினரின் புரட்சித்தலைவரின் புகழ்பாடும் பாடல்கள் ஒலிக்க, நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு பண்ருட்டி முன் நகரமன்ற தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி. ஆரின் திருவுருவப் படத்திற்கு மாலை அனிவித்து, இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப் பட்டது. மேலும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஆட்சி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தலைமையில் அமைந்திட உறுதி ஏற்கப்பட்டது.
பிறந்தநாள் விழாவின் முத்தாய்ப்பாக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமை ஏற்று பண்ருட்டி முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலையில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சுந்தரவாண்டியை சேர்ந்த கபிலன் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து 50 நபர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம் கழக சால்வைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வீரப்பெருமாநல்லூரில் காலை 8 மணி அளவில் முன்னால் ஒன்றிய கவுன்சிலர் சிவகுரு ஏற்பாட்டில் பண்ருட்டி வடக்கு முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் பெருமாள் முன்னிலையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பண்ருட்டி முன் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம் பாரதரத்னா எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கியதுடன் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கினார்.
விழாவில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள், இந்நாள் நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர், மகளிர் அணியினர், வர்த்தகர்கள், செயல்வீரர்கள், பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...