திருப்பரங்குன்றம் தீபத்துாண் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து தீபம் ஏற்றலாம் என்பது உறுதியாகி உள்ளது.
தூணில் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது.
தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல் துறை, தொல்லியல் துறை, தேவஸ்தானம் முடிவு செய்யலாம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு அரசே காரணம் -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பது அர்த்தமற்றது.
பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு அரசே காரணம்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு கருத்து.