கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.60 லட்சம் செலவில் கட்டப்பட்ட கல்லூரி உணவக கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் திறந்து வைத்தார். கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த நிலையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில்
கடலூர் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அய்யப்பன் எம்.எல்.ஏ. மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்