ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்த.
ரஜினிகாந்த் நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்- பிரதமர் நரேந்திர மோடி.
ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!
ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் ரஜினிகாந்த், மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!-முதல்வர் ஸ்டாலின்.
ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்த.