
கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
கடலுார் மாநகர மஞ்சகுப்பம் மைதானத்தில் அமைந்துள்ளது 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட திறந்த வெளி மைதானம். சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மைதானம் அமைந்துள்ளது.
தற்போது இந்த மைதானத்தில் முதியவர்கள் மாலை நேரத்தில் சக நண்பர்களோடு சேர்ந்து பேசி இயற்கை காற்றுவாங்கி பொழுதை கழிப்பதற்கு ஏற்ற இடமாகவும், அரசு புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் மாநாடு போன்றவற்றை நடத்தி வந்தனர். கடலூர் மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் மைதானம் உள்ளது.
கடலூர் நகராட்சியாக இருந்த கடந்த 2021ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.
கடலுார் மாநகராட்சியில் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன அதில்
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வணிக வளாகம் கடைகள் கட்டும் பணி தொடர்பாக, ரூ.14.15 கோடி மதிப்பில் 77 கடைகள் மற்றும் கன்வென்ஷன் மையம் கட்ட திட்டமிடப்பட்டு கட்டுமான பணிகளும் நடைபெற்ற வருகிறது.
இந்தக் கட்டுமானப் பணிகளுக்கு கடலூர் மூத்த குடிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு உள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறியும் மாநகராட்சி நிர்வாகம் கட்டுமான பணிகளை மக்கள் கருத்து கேட்காமல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலுரை சேர்ந்த ஆனந்த் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி மாநகராட்சி நிர்வாகம் வணிக வளாகம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் இதனால் மைதானம் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே இப்பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் சுற்று எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது தற்போது நடைபெற்று வரும் கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் தலைமையில் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற ஆணையினை கொண்டு வந்து கடலூர் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் மனு அளித்து உடனடியாக கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கூறினர் .
மாநகராட்சி ஆணையர் உடனடியாக உயர்நீதிமன்ற உத்தரவு வந்து விட்டது அதன்படி பணிகளை நிறுத்தவும் உத்தரவிட்டார்..