கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு கலைக் கல்லூரியில் நிலத்தடி நீர் சிக்கனம் குறித்து விழிப்புணர் பிரச்சாரம் நடைபெற்றது. நீர் சத்தி அமைச்சகம் மற்றும் பிரம்ம குமாரிகள் ஆன்மீக இயக்கம் இணைந்து நீர் சேமிப்புக்கான விழிப்புணர்வு மற்றும் நீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரசு கலை கல்லூரி முதல்வர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். பிரம்மா குமாரிகளின் நிர்வாகி முருகன். ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் நிலத்தடி நீர் சிக்கனம் மற்றும் தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.