
கடலூரில் முன்னாள் முப்படை தளபதி “பிபின் ராவத் 4-ம் ஆண்டு நினைவு தினம்“ அனுசரிக்கப்பட்டது. சைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கபடடது. கடலூர் திருப்பாதிரிபுலியூரில் உள்ள அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் தலைவர் “S.பாபு” தலைமை தாங்கினார். முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களின் சிலைக்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினார்கள். நிழ்ச்சியில் முன்னாள் படை வீரர்கள் சேகர், மதியழகன், பன்னீர் செல்வம், பாலகுரு மற்றும் சாரல் சங்கர் பங்கேற்றனர். இறுதியாக நன்றியுறை வெங்கடேஷ் வழங்கினார்.