BREAKING: பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுகளுக்கு ரூபாய் 3000 தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்ப
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ. 3000 ரொக்கமாக வழங்கப்படும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட முதலமைச்சர் உத்தரவு.
இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.