பட்ஜெட் அறிவிப்புகள்: நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில், தேங்காய் விளைச்சலை ஊக்குவித்து, உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம். 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய முந்திரியை உயர்மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டாக (Premium global brand) மாற்ற முயற்சி எடுக்கப்படும். மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும், 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும் இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படும். பல முக்கியமான சுற்றுலா தலங்களில் சுற்றுலா வழிக்காட்டிகளை உருவாக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இது புதிய வேலைவாய்ப்புகளையும், ‘கன்டென்ட்’ கிரியேட்டர்களையும் உருவாக்கும்– நிர்மலா சீதாராமன்