| BIG BREAKING:அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் |
BIG BREAKING:அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (TAPS) செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு பணியாளர்களின் 10% பங்களிப்பு எடுக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தில், 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். […]