| லட்டுகள் விற்பனையில் சாதனை! |

லட்டுகள் விற்பனையில் சாதனை! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025-ம் ஆண்டில், 13.52 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை. கடந்த 2024-ம் ஆண்டில் 12.15 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 1.37 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு கூடுதலாக விற்பனை.

| அடுத்த வாரம் மழைக்கு வாய்ப்பு |

அடுத்த வாரம் மழைக்கு வாய்ப்பு. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஜனவரி 6-ஆம் தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்பு.   இது புயலாக வலுப்பெற சாத்தியம் இல்லை; குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஜனவரி இரண்டாவது வாரத்தில் மழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.

| காரைக்கால் மீனவர்கள் கைது |

காரைக்கால் மீனவர்கள் கைது. காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நடவடிக்கை.

| அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு |

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு. தமிழக அரசு சி, டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்ச வரம்புக்குட்பட்டு மிகை ஊதியம். ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ.1,000 பொங்கல் போனஸ். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கும் ரூ.1,000 போனஸ்.

| குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு-சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை |

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு-சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை   தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவிகளில் குளிக்கத் தடை.

Max Tamil 24×7 brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in தமிழ். Max tamil [ தமிழ் ] 24×7 Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows.

எங்களின் பயணம் நடுநிலையானது...